“அகண்டா 2” உடன் மோதும் “மௌக்லி 2025”
“அகண்டா 2” படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.;
சென்னை,
ரோஷன் கனகலா நடித்த “மௌக்லி 2025” படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருந்தது. ஆனால் “அகண்டா 2” ஒத்திவைக்கப்பட்டதாலும், அந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாலும் “மௌக்லி 2025” பட தயாரிப்பாளர்கள் படத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில், “அகண்டா 2” வருகிற 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, “மௌக்லி 2025” படக்குழுவும் புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்படம் 13-ம் தேதி திரைக்கு வருகிறது. 12 ந் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.