நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்
தற்போது தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வருகிறார்.;
நெல்லை,
நடிகர் தனுஷ் கடைசியாக நடித்த படம் தேரே இஷ்க் மே. பாலிவுட் படமான இது இந்தியில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் 54ஆவது படமாக உருவாகிவரும் இதில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று அதிகாலை வந்த தனுஷ், நெல்லையப்பரை வழிபட்டார். அவருடன் இயக்குநர் விக்னேஷ் ராஜா உள்ளிட்டரும் வந்தனர். கோவிலுக்குள் சென்ற நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனை தரிசித்தனர்.