திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா குடும்பத்துடன் சாமி தரிசனம்

நடிகை ஸ்ரேயா சரண் தனது மகள் ராதாவுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-12-10 12:45 IST

திருமலை,

2003ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையிலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிவில் தனது தயார் நீரஜா சரண் மற்றும் மகள் ராதாவுடன் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்