தனுஷுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;

Update:2025-07-28 10:25 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

இட்லி கடை படத்தை தொடர்ந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில், நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இட்லி கடை பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்