இயக்குனர் அவதாரம் எடுக்கும் சாய்பல்லவி?

தற்போது சாய்பல்லவி, நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்;

Update:2025-02-07 08:50 IST

சென்னை,

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

தற்போது இவர் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் முன்னதாக இப்படத்தின் புரமோஷன் பணியின்போது நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய்பல்லவி அடுத்து இயக்குனராக உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, ஒரு நாள் படம் இயக்க உள்ளதாகவும் அதில் தன்னை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாகவும் சாய்பல்லவி கூறியதை நாக சைதன்யா பகிர்ந்துகொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்