''எல்.சி.யு''வில் இணையும் புதிய நடிகை - லோகேஷ் கொடுத்த அப்டேட்

எல்.சி.யுவில் ஒரு புதிய நடிகை இணைய இருப்பதாக லோகேஷ் கூறி இருக்கிறார்.;

Update:2025-07-25 13:32 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜ் 'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் மற்றும் தயாரிக்கும் 'பென்ஸ்' படமும் எல்.சி.யு வின் கீழ் உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ் படங்களை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த எல்.சி.யுவில் ஒரு புதிய நடிகை இணைய இருப்பதாக லோகேஷ் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,

"நான் ஒரு நடிகைக்காக கதை எழுதுகிறேன், அது எல்.சி.யுவில் புதிய கதாபாத்திரமாக இருக்கும். ''கைதி 2''ல் 2-3 புதிய கதாபாத்திரங்கள் இருக்கும்" என்றார். முன்னதாக அனுஷ்கா ஷெட்டி கைதி 2-ல் இணைய இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா, சவுபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்