வரலட்சுமி சரத்குமாருக்கு 'போர்ஷே' ரக காரை பரிசளித்த நிக்கோலாய்
நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிறத்திலான 'போர்ஷே' ரக காரை அவர் கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார்.;
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிறத்திலான 'போர்ஷே' ரக காரை அவர் கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த காருக்கு பார்பின்னு பெயர் வைக்கப்போறேன்' என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார்.