’48 மணி நேரமாக தூங்கவில்லை, அது இன்னும் என்…’ - ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே, தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.;

Update:2025-12-12 23:41 IST

சென்னை,

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீமிங் ஆகிறது.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் தேரே இஸ்க் மே படத்தை ஷாலினி பாண்டே பாராட்டி இருக்கிறார்.

தேரே இஸ்க் மே படத்தை பார்த்து 48 மணி நேரமாக தூங்கவில்லை எனவும் அது இன்னும் என் இதயத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். 

மேலும், தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் காலத்தை தாண்டிய இசை, கிரித்தி சனோனின் மூச்சை பறிக்கும் அழகும் நடிப்பும், ஆனந்த் எல். ராயின் மாஸ்டர் கிளாஸ் இயக்கம் எனவும் பாராட்டி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்