சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் - பெற மறுத்த நடிகர் ரவி மோகன்
வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பி இருக்கிறது.;
சென்னை ,
சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளது.
10 மாதங்களாக தவணை செலுத்தாத நிலையில் பங்களாவை ஜப்தி செய்ய எச்டிஎப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற்றுக் கொள்ள நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்து, வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.