'ஒரே ஜாதி, ஒரே மதம்': நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.;

Update:2025-11-19 17:06 IST

சென்னை,

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். நிகழ்வில் ​​ஐஸ்வர்யா ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேசினார்

அவர் பேசுகையில், , "ஒரே ஒரு சாதிதான் உள்ளது, அது மனிதகுலம் என்ற சாதி. ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது, அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி மட்டுமே உள்ளது, அது உள்ளத்தின் மொழி, ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்தவர்" என்றார். அவரது உரை, சுருக்கமாக இருந்தாலும், கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்தப் புதிய படங்களிலும் அவர் கையெழுத்திடவில்லை.



Tags:    

மேலும் செய்திகள்