மகனின் பெயரை அறிவித்த நடிகை பரினீதி சோப்ரா
நடிகை பரினீதி சோப்ராவுக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.;
சென்னை,
சமீபத்தில் பெற்றோரானா நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சத்தா, தற்போது தங்கள் மகனின் முதல் புகைப்படத்தை பகிர்ந்து, பெயரையும் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சத்தாவுக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இது அவர்களது முதல் குழந்தையாகும்.
இந்நிலையில், பரினீதி மற்றும் ராகவ் தங்கள் மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, பெயரையும் அறிவித்து மகிழ்ந்துள்ளனர். அதன்படி, பரினீதி சோப்ராவும் ராகவ் சாத்தாவும் தங்கள் முதல் குழந்தைக்கு ’நீர்’ என்று பெயரிட்டுள்ளனர்.