'செவ்வாய்க்கிழமை' பட நடிகையின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது

நடிகை பாயல் ராஜ்புத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.;

Update:2025-01-25 09:27 IST

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு அஜய் பூபதி எழுதி இயக்கிய திகில் திரைப்படம் 'செவ்வாய்க்கிழமை'.இது கன்னடத்தில் மங்களவாரம் என்றும், இந்தியில் மங்களவார் என்றும், தமிழில் செவ்வாய்கிழமை என்றும், மலையாளத்தில் சோவ்வாழ்ச்ச என்ற பெயரிலும் வெளியானது.

இதில், நடிகை பாயல் ராஜ்புட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தையடுத்து, இவர் எந்த படத்திலும் நடிக்காதநிலையில், தற்போது இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி, 'வெங்கடலட்சுமி' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முனி எழுதி, இயக்கி, திரைக்கதையும் அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்