துல்கர் சல்மான் படத்திற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற பூஜா ஹெக்டே?

நீண்ட இடைவெளிக்கு பிறகு பூஜா ஹெக்டே இப்படத்தின் மூலம் தெலுங்குத் துறைக்குத் திரும்பி இருக்கிறார்.;

Update:2025-10-08 20:03 IST

சென்னை,

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் தொடர் வெற்றிகளுடன் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக துல்கர் சல்மான் வலம் வருகிறார். தற்போது ரவி நெலகுடிட்டி இயக்கும் மற்றொரு தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பூஜா ஹெக்டே இப்படத்தின் மூலம் தெலுங்குத் துறைக்குத் திரும்பி இருக்கிறார். இப்படத்திற்காக பூஜா ஹெக்டேவுக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்