கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” டிரெய்லர் வெளியீடு

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-11-13 20:01 IST

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ''ரகு தாத்தா'' படம் சரியாக போகாததால், ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை. ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்