மம்தா மோகன்தாஸ் நடிக்கும் புதிய படம்...பர்ஸ்ட் லுக் வெளியீடு
கடைசியாக விஜய்சேதுபதியுடன் மகாராஜா படத்தில் மம்தா நடித்திருந்தார்.;
சென்னை,
தமிழில் 2006-ல் சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமான பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக விஜய்சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, மம்தா அடுத்ததாக பிரேம்பாட்டா என்ற படத்தில் நடிக்கிறார். அதற்கான பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது. அமீர் பல்லிக்கல் இயக்கும் இப்படத்தில் மம்தாவுடன் சைஜுகுருப் நடிக்கிறார்.