சித்தார்த் மல்கோத்ரா-ஜான்வி கபூர் காதல் காட்சிக்கு எதிர்ப்பு.... வழக்கு பதிவு செய்ய கோரிக்கை

இப்படம் வருகிற 29-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.;

Update:2025-08-16 18:44 IST

சென்னை,

சித்தார்த் மல்கோத்ரா -ஜான்விகபூர் ஆகியோர் 'பரம்சுந்தரி' என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 29-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

டிரெய்லருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தபோதிலும், கிறிஸ்தவ அமைப்பாளர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மும்பை காவல்துறை, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், டிரெய்லரில் சித்தார்த்தும், ஜான்விகபூரும் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் காதல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகளை படத்தில் இருந்தும், டிரெய்லரில் இருந்தும் நீக்க வேண்டும். மேலும் படத்தயாரிப்பாளர்  மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்