ஒரே படத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா, ராஷி கன்னா...பர்ஸ்ட் லுக் வெளியீடு

கடைசியாக தமிழில் ''அகத்தியா'' படத்தில் ராஷி கன்னா நடித்திருந்தார்.;

Update:2025-07-22 14:57 IST

சென்னை,

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் "உஸ்தாத் பகத்சிங்" படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிகை ராஷி கன்னா இணைந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. கடைசியாக தமிழில் ''அகத்தியா'' படத்தில் நடித்திருந்த இவர் தற்போது 'தெலுசு கதா' என்ற தெலுங்கு படத்திலும், 'பார்ஜி-2' என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் பவன் கல்யாண் நடிக்கும் "உஸ்தாத் பகத்சிங்" படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இணைந்திருக்கிறார். அவர் இப்படத்தில் ஸ்லோகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இப்படத்தில் ஏற்கனவே முன்னணி கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். ஒரே படத்தில் ஸ்ரீலீலாவும் ராஷி கன்னாவும் நடிப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ இசையமைக்கிறார

Tags:    

மேலும் செய்திகள்