ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...வெளியான முக்கிய அப்டேட்

சமீபத்தில் பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான "மோனிகா" பாடல் அற்புதமான வரவேற்பைப் பெற்றது.;

Update:2025-07-15 07:39 IST

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ''கூலி'' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த ஆக்சன் திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா , ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர் , சத்யராஜ் மற்றும் அமீர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ''கூலி'' டிரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று வெளியாக உள்ளதாகவும் அதுவரை படம் பற்றி எதையும் தான் பகிர விரும்பவில்லை என்றும் லோகேஷ் கூறினார். இது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியிடப்பட்ட "மோனிகா" பாடல் அற்புதமான வரவேற்பைப் பெற்றது.அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்