மன்னிப்பு கேட்ட ’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ பட இயக்குனர் - என்ன நடந்தது?

இயக்குனர் சாய்லுவின் சமீபத்திய கருத்துகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.;

Update:2025-11-22 06:02 IST

சென்னை,

இயக்குனர் சாய்லுவின் சமீபத்திய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ என்ற படத்தை சாய்லு இயக்கி உள்ளார். இப்படத்தில் அகில் உத்தேமரி மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் நேற்று வெளியானது.

இதற்கிடையில், இப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நிகழ்வில் பேசிய இயக்குனர் சாய்லு, படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றால், ஐதராபாத்தின் அமீர்பேட்டை எக்ஸ்-ரோடுகளில் அரைநிர்வாணமான ஓடுவதாக தெரிவித்தார். அவரது இந்த கருத்து வைரலானது, மேலும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று நடந்த ஒரு விழாவில் இதற்கு இயக்குனர் சாய்லு மன்னிப்புக்கேட்டார். புதிய இயக்குனருக்கு எப்படி பேசுவதென்று தெரியவில்லை எனவும் மன்னித்துவிடுங்கள் எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்