விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணையும் இளம் நடிகை?
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.;
சென்னை,
விஜய் தேவரகொண்டா தற்போது ரவி கிரண் கோலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில், இந்தப் படம் குறித்த ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாடல் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்தப் பாடலில் நடனமாட பிரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.