அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் ராஷ்மிகாவுக்கு நெகட்டிவ் ரோலா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.;

Update:2025-07-12 20:30 IST

சென்னை,

ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படும்நிலையில் படத்தில் அவர் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ராஷ்மிகா ஏற்கனவே படத்திற்கான தனது லுக் டெஸ்ட்டை முடித்துவிட்டதாகவும், அக்டோபர் முதல் படப்பிடிப்பை தொடங்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஏஏ22xஏ6 திரைப்படம், பான் இந்திய அளவில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்