நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார்
கோட்டா சீனிவாச ராவ் காலமான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.;
சென்னை,
தொடர் இழப்புகளால் தெலுங்கு திரையுலகம் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 13 அன்று, நீண்டகால உடல்நலக்குறைவால், மூத்த நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோட்டா சீனிவாச ராவ் காலமான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் ரவி தேஜாவின் தந்தை பூபதிராஜு ராஜகோபால் ராஜு(90), வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். ஐதராபாத்தில் உள்ள ரவி தேஜாவின் இல்லத்தில் அவர் இறந்தார். பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.