திருப்பதியில் சாமி தரிசனம் செய்த 'ரெட்ரோ' நாயகி
’ரெட்ரோ’ படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது;
திருப்பதி,
தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும், ரஜினி நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்திலும் நடிக்கிறார்.
இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஸ்ரீ காளகஸ்தி சிவன் கோவிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் பூஜா ஹெக்டே வழிபாடு செய்தார்.