''நான் அவருடைய தீவிர ரசிகன்'' - ''சயாரா'' இயக்குனர்

அஹான் பாண்டேவின் அறிமுக படமான 'சயாரா' பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.;

Update:2025-07-20 18:41 IST

சென்னை,

சூப்பர் ஹிட் படமான 'சயாரா'வின் இயக்குனர் மோஹித் சூரி, சமீபத்தில் 'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவை பாராட்டினார்.

'சயாரா' படம் வெளியான பிறகு ஊடகங்களிடம் பேசிய சூரி, தான் வங்காவின்  தீவிர ரசிகன் என்றும், 'அனிமல்' திரைப்படத்தை பார்த்து மிகவும் பிரமித்துப் போனதாகவும் தெரிவித்தார். வாங்காவின் துணிச்சலான கதைசொல்லல் மற்றும் இயக்கும் பாணி தன்னை ஆழமாக ஊக்கப்படுத்தியதாக சூரி கூறினார்.

அஹான் பாண்டேவின் அறிமுக படமான 'சயாரா' பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு மகேஷ் பாபு, ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்