திஷா பதானி, திரிப்தி டிம்ரி, தமன்னா ...கவனம் ஈர்க்கும் ’ஓ ரோமியோ’ பட டிரெய்லர்
இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரைக்கு வருகிறது.;
சென்னை,
பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ ரோமியோ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த ஆக்சன்–திரில்லர் திரைப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷால் பரத்வாஜ் - ஷாஹித் கபூர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், பிப்ரவரி 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.