விஷால் - சுந்தர்.சி கூட்டணி: “புருஷன்” படத்தின் படப்பிடிப்பு பூஜை
சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் இணையும் ‘புருஷன்’ திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.;
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் புருஷன். விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான 'மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்' ஆகிய 3 படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர் சி படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.
‘புருஷன்’ படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. ஆக்ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் இணையும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது.