சில நடிகைகளுக்கு சோகமாக நடிக்க தெரியாது - நடிகை மாளவிகா மோகனன்

தமிழில் சில நடிகைகள் வசனம் குறித்து கவலைப்படுவதே இல்லை என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.;

Update:2026-01-22 20:11 IST

பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்,மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த மாளவிகா, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தில் ஆராத்தி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

இவரது நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், தமிழில் ‘சர்தார் 2’ தெலுங்கில் ‘ராஜாசாப்’ படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேர்காணல் ஒன்றில் நடிகை மாளவிகா மோகனன் கூறுகையில், “தமிழில் சில நடிகைகள் வசனம் குறித்து கவலைப்படுவதே இல்லை. சோகமாக இருக்க வேண்டிய காட்சியில் வெறுமனே முகத்தை மட்டும் சோகத்துடன் வைத்துக்கொள்கிறார்கள்.

சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன், டு, திரீ, போர் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு தான். அதேபோல கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏபிசிடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். டப்பிங்கில் அதை சரிவர வசனத்துடன் பொருத்திவிடுகிறார்கள். சில நடிகைகள் தன்னுடைய மொத்த கரியரிலுமே இதை வேலையாதான் செய்கிறார்கள்” என குற்றம்சாட்டியிருக்கிறார் மாளவிகா மோகனன்.

Tags:    

மேலும் செய்திகள்