’சக்தி ஷாலினி’யில் இணைந்த சையாரா பட நடிகை...

சக்தி ஷாலினி அடுத்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-10-21 12:00 IST

சென்னை,

மடோக் ஹாரர் காமெடி யுனிவர்ஸின் சமீபத்திய ஹாரர்-காமெடி படமான தம்மா, தீபாவளி ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்ஜ்யா படத்திற்கு பெயர் பெற்ற ஆதித்யா சர்போத்தார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதியில் யுனிவர்ஸின் மற்றொரு ஹாரர்-காமெடி படமான சக்தி ஷாலினியின் ஒரு காட்சியைச் சேர்த்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதில் சையாரா மூலம் புகழ் பெற்ற அனீத் பத்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சக்தி ஷாலினி அடுத்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளனர். முதலில், இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் விலகினார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் அனீத் பத்தா நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்