தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஷாலினி பாண்டே...புகைப்படங்கள் வைரல்
ஷாலினி பாண்டே, தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஷாலினி பாண்டே தனது சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் தங்க நிறத்தில் அவர் அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறன்றன.