அன்றும் இன்றும்...வைரலாகும் ஷ்ரத்தா கபூரின் புகைப்படம்

தனது தற்போதைய புகைப்படத்தையும் சின்ன வயது புகைப்படத்தையும் ஷ்ரத்தா கபூர் பகிர்ந்துள்ளார்.;

Update:2025-05-07 09:22 IST

சென்னை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷ்ரத்தா கபூர் தனது அன்றும் இன்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் கடைசியாக 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், தனது தற்போதைய புகைப்படத்தையும் சின்ன வயது புகைப்படத்தையும் ஷ்ரத்தா கபூர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்