''லக்'' முதல் ''கூலி'' வரை- திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த ஸ்ருதிஹாசன்
தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் ஸ்ருதிஹாசன்.;
சென்னை,
நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கமல்ஹாசனின் மகள் என்ற அறிமுகத்துடன் சினிமாவில் அறிமுகமாகினாலும், தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ''ஹே ராம்'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் இம்ரான் கானுக்கு ஜோடியாக ''லக்'' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ''ஏழாம் அறிவு'' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து ''3'', ''பூஜை'', ''புலி'', 'வேதாளம்', 'சிங்கம் 3', ''லாபம்'' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினிகாந்தின் கூலி, விஜய் சேதுபதியின் ''டிரெயின்'' , ''தி ஐ'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் ''ஜனநாயகன்'' படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ''தக் லைப்'' படத்தில் ''விண்வெளி நாயகன்'' பாடலை இவர் பாடி இருந்தார்.