நாயகனாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன்!

டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்' என்ற படத்தில் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.;

Update:2025-11-11 07:44 IST

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தநிலையில் ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Advertising
Advertising

ஆடு மேய்க்கும் ஒரு பெரியவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு தரும் கதை. பெரியவராக கங்கை அமரனும், போலீஸ்காரராக தர்ஷன் கணேசனும் நடிக்கிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

சினிமா தொடர்பான படிப்புகளை படித்திருக்கும் தர்ஷன் கணேசன், பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். படத்தின் இதர நடிகர் - நடிகைகள் அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்