‘ஆரோமலே’ படத்தைப் பார்த்து படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடித்துள்ள “ஆரோமலே” படம் வருகிற 7ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-11-05 12:02 IST

சென்னை,

'முதலும் நீ முடிவும் நீ' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். அதனை தொடர்ந்து இவர் சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது, சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரோமலே என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

இந்த படம் நாளை மறுநாள் (7ந் தேதி) வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினை வாழ்த்தியுள்ளார். மேலும், படக்குழுவினருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அவருடன் எடுத்த புகைப்படங்களை நடிகர் கிஷன் தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்