'சன் ஆப் சர்தார் 2' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...திரைக்கு வருவது எப்போது?
''சன் ஆப் சர்தார் 2'' படம் வருகிற 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது.;
சென்னை,
'சன் ஆப் சர்தார் 2' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விஜய் குமார் அரோரா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், மிருணாள் தாகூர், ரவி கிஷன், சஞ்சய் மிஸ்ரா, நீரு பஜ்வா, சங்கி பாண்டே, குப்ரா சேத், தீபக் டோப்ரியல், விந்து தாரா சிங், ரோஷ்னி வாலியா, ஷரத் சக்சேனா, சாஹில் மேத்தா மற்றும் மறைந்த நடிகர் முகுல் தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம், 2012-ம் ஆண்டு வெளியான அதிரடி-நகைச்சுவை படமான ''சன் ஆப் சர்தார்'' படத்தின் தொடர்ச்சியாகும். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.
''சன் ஆப் சர்தார் 2'' படம் வருகிற 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தநிலையில், தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.