தெலுங்கில் அறிமுகம்... 'ஹிட் 3' படத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? -ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்
நானியின் ஹிட் 3 படத்தின் மூலம் கேஜிஎப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார்.;
ஐதராபாத்,
நானி தயாரித்து நடித்திருக்கும் படம் ஹிட் 3. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில், தெலுங்கில் அறிமுகமாக இப்படத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை ஸ்ரீநிதி ஷெட்டி பகிர்ந்துள்ளார்.
அதன்படி, தனக்கு இந்த பட வாய்ப்பு வந்த உடன் யோசிக்காமல் சம்மதித்ததாக கூறினார். மேலும், நானி ஒரு பிராண்ட் என்றும், அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும்போது அதிக கேள்விகள் கேட்காமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.