'ரெட்ரோ' போஸை ஒன்றாக செய்த சூர்யா, விஜய் தேவரகொண்டா - வீடியோ வைரல்

’ரெட்ரோ’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.;

Update:2025-04-27 20:10 IST

ஐதராபாத்,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'கங்குவா' தோல்வி படமாக அமைந்தநிலையில், சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ' மீது அனைவரின் கவனமும் உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'ரெட்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தின் மாஸ் போஸை சூர்யா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒன்றாக செய்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்