பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசுவது போன்ற ஆடியோ...'தி கோட்' பட நடிகர் விளக்கம்

இதற்கு விளக்கம் அளித்து நடிகர் அஜ்மல் வீடியோ வெளியிட்டுள்ளார்;

Update:2025-10-21 06:17 IST

சென்னை,

அஞ்சாதே, கோ, தி கோட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகர் அஜ்மல் அமீர், பெண் ஒருவருடன் பாலியல் ரீதியாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் அஜ்மல் அமீர். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான பிப்ரவரி 1படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் அஞ்சாதே , விஜயின் தி கோட் , கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் பெண்ணொருவரிடம் பாலியல் ரீதியாக பேசுவது போன்ற ஆடியோ கிளிப் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து நடிகர் அஜ்மல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ’இரண்டு நாட்களுக்கு முன்பு, என்னைப் பற்றி மிகவும் மோசமான செய்திகள் வெளிவந்தன. ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எந்தவொரு போலி கதையோ , குரலோ என்னையும் என் வாழ்க்கையையும் அழிக்க முடியாது. சமூக ஊடகங்களில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்