பவிஷுக்கு ஜோடியான தெலுங்கு வைரல் பெண்

நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.;

Update:2025-10-28 08:41 IST

சென்னை,

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையடுத்து, நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்க உள்ளார். நாட்டுப்புற பாடல்களுக்கு பெயர் பெற்ற இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர்.

"தரிபொன்தொத்துண்டு" (டிஜே பதிப்பு) பாடலுக்காக அவர் பெரும் புகழ் பெற்றார். ஐந்து மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது. இது இதுவரை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. இந்த வைரல் பெண்ணுக்கு தற்போது தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்