’அதனால்தான் இவ்வளவு நாட்கள் படங்களில் நடிக்கவில்லை’ - நடிகை யாமினி

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களைப் பற்றி அவர் பகிர்ந்தார்.;

Update:2025-12-13 00:14 IST

சென்னை,

‘ராபசா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாமினி பாஸ்கர். அதன் பிறகு, கதாநாயகியாக மாறி பல படங்களில் நடித்துள்ளார். பலே மஞ்சி சௌக பேரமு, நாடு மா பதனம், நர்த்தனஷாலா, கட்டமராயுடு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாமினி பாஸ்கர் ,சைக் சித்தார்த் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சித்து ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் புரமோஷன்களின் ஒரு பகுதியாக இவர் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், “இந்தத் துறையில் மட்டுமல்ல, வெளியிலும் கொடுமைப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். நானும் அவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால், நடுவில், அப்படிபட்ட சிலர் வந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை, இந்தத் துறையை விட்டு வெளியேற நினைத்தேன். அதனால்தான் நான் நீண்ட காலமாக படங்களில் நடிக்கவில்லை.

எல்லோரும் இல்லை. சிலர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். அவர்கள் ஆண் ஆதிக்கத்தைக் காட்டுகிறார்கள். பெண்களை இழிவாகப் பார்க்கிறார்கள். வாய்ப்புக்காக எதையும் செய்வார்கள் என்று நினைக்கிறார்கள்.

ஆண்கள் மட்டும்தான் அப்படின்னு நான் சொல்ல வில்லை. சமீப காலமாக பெண்களும் அப்படி ஆகிட்டாங்க. இப்படிப்பட்டவங்களை பயமில்லாமல் தைரியமா எதிர்கொள்ள வேண்டும்” என்றார். யாமினி பாஸ்கர் சொன்ன இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்