''அதனால் படத்தில் பாடல்களே வைக்கவில்லை'' - 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்' நடிகர்
இப்படத்தில் கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார்.;
சென்னை,
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கும்நிலையில், சமீபத்தில் 'டிரெய்லர்' வெளியானது.
படம் குறித்து ஆதவா ஈஸ்வரா கூறுகையில், ''மதங்களைக் கடந்து மனிதாபிமானம் பற்றிப் பேசும் படம் இது. படத்தின் முதல் பாதியில் கேள்வி களாகவும், இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகள் இருக்கும். கதையின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக இருக்கும் என்பதால் பாடல்கள் இல்லை'' என்றார்.