அஜித்தை இயக்கும் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர்

வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-04-16 06:42 IST

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த பல மாதங்களாக இருந்து வருகின்றது. அந்த வகையில், சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இவர்களில் யாராவது இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில் 'வாத்தி, லக்கி பாஸ்கர்' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 46' என்ற படம் இயக்க உள்ளார். 'சூர்யா 46' படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதன் பிறகு தான் அஜித் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்