காந்தாரா சாப்டர் 1 - இறுதிக்காட்சியில் பட்ட கஷ்டங்கள்....புகைப்படங்களை பகிர்ந்த ரிஷப் ஷெட்டி
இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.;
சென்னை,
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக மாறியுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தான் சந்தித்த கஷ்டங்களை காண்பிக்கும் விதமாக அவர் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் உள்ள ரிஷப் ஷெட்டியின் வீங்கிய கால்கள், கிளைமாக்ஸ் காட்சிக்காக அவர் அனுபவித்த கடின உழைப்பு மற்றும் வலியின் கதையைச் சொல்கின்றன.
காந்தாரா: சாப்டர்1' படத்திற்காக ரிஷப் ஷெட்டியும் அவரது குழுவினரும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அயராது உழைத்துள்ளனர். இந்த விஷயத்தைப் பற்றி அவரே சில இடங்களில் பேசியுள்ளார்.