"இட்லி கடை" படத்தின் முழு ஆல்பம் வெளியானது

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-09-26 08:04 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இட்லி கடை படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும், முழு ஆல்பம் வடிவில் வெளியிட்டுள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்