'சப்தம்' படத்தின் 2-வது பாடல் வெளியீடு

இப்படம் வருகிற 28-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.;

Update:2025-02-23 12:42 IST

ஐதராபாத்,

'ஈரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து 'சப்தம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

இந்த படத்தில் ஆதி, ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பேய்களை பற்றி தெரிந்துகொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற 28-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்