'காந்தா' படத்திலிருந்து "கார்முகில் கண்ணழகோ" என்ற பாடல் வெளியீடு

இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-11-21 07:58 IST

சென்னை,

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமா நடிகருக்கும், அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையேயான 'ஈகோ'வை மையப்படுத்திய கதை தான் 'காந்தா'. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில், இப்படத்திலிருந்து "கார்முகில் கண்ணழகோ" என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவம் எழுதியுள்ளார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்