'கம்பேக் கொடுக்க சரியான நேரம்' - ரம்பா
ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரம்பா.;
சென்னை,
தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா தற்போது மீண்டும் சினிமாவிற்குள் வரப் போவதாக கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'என்னுடை முதல் காதல் எப்போதுமே சினிமாதான். இது கம்பேக் கொடுக்க சரியான நேரம் என்று நினைக்கிறேன். எந்த சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். புதிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ரசிகர்களை கவர ஆவலுடன் இருக்கிறேன்' என்றார்.