'வாடிவாசல்' படத்தின் அப்டேட் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்

'வாடிவாசல்' படத்திற்கான பணிகளில் இயக்குனர் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.;

Update:2025-04-29 11:23 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1-ந் தேதி வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு , படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்