’தி பாரடைஸ்’ படத்தின் பிடிஎஸ் வீடியோ - இணையத்தில் வைரல்

நானி நடிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-12-14 23:08 IST

சென்னை,

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி பாரடைஸ் படக்குழு வாழ்த்து கூறியுள்ளது. 

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி பாரடைஸ் படக்குழு ஒரு சிறப்பு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்