பிரபாஸின் ’தி ராஜாசாப்’ - 2வது பாடல் புரோமோ வெளியீடு
இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.;
சென்னை,
பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 2-வது பாடல் வெளியாக தயாராகி இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது அப்பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் வருகிற 17-ம் தேதி மாலை 6.35 மணிக்கு வெளியாகிறது.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.