’அவர்கள்தான் எனக்கு பிடித்த ஹீரோக்கள்’ - நடிகை ஹர்ஷாலி

ஹர்ஷாலி "அகண்டா 2" மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.;

Update:2025-12-01 21:33 IST

சென்னை,

பத்து வருடங்களுக்கு முன்பு சல்மான் கானின் ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தில் சிறுமியாக நடித்து பல இதயங்களை கவர்ந்த ஹர்ஷாலி மல்ஹோத்ரா, இப்போது தனது 17 வயதில் நடிப்பு பயணத்தின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் "அகண்டா 2" மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஹர்ஷாலி பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போதைய தெலுங்கு ஹீரோக்களில் தனக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் என்பதையும் ஹர்ஷாலி வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ஆகியோர் எனக்குப் பிடித்த ஹீரோக்கள்,” என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்